ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி போற்றி
விநாயகர் துதி (திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளியது)
பிடி-யதன் உரு-உமை கொள-மிகு கரி-யது
வடிகொடு, தனது-அடி வழிபடும் அவர் இடர்
கடி கணபதி வர அருளினன் - மிகுகொடை
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே!
ஸ்ரீசைலம் / திருமலை / திருப்பருப்பதம் திருப்புகழ்
ஒருபதும் இருபதும் அறுபதும் உடன்அறும்
உணர்வுற இருபதம் உளநாடி,
உருகிட முழுமதி தழலென ஒளிதிகழ்
வெளியொடு ஒளிபெற விரவாதே,
தெருவினில் மரமென எவரொடும் உரைசெய்து
திரிதொழில் அவமது புரியாதே,
திருமகள் மருவிய திரள்புய அறுமுக
தெரிசனை பெறஅருள் புரிவாயே!
பரிவுடன் அழகிய பழமொடு கடலைகள்
பயறொடு சிலவகை பணியாரம்
பருகிடு பெருவயிறுடையவர் பழமொழி
எழுதிய கணபதி யிளையோனே!
பெருமலை யுருவிட அடியவர் உருகிட
பிணிகெட அருள்தரு குமரேசா!
பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்
பிணையமர் திருமலை பெருமாளே!
தொடர்பிற்கு எங்கள் முகநூல் பக்கம்
0 Comments