திண்டுக்கல்லில் அனைத்து நாயுடு நாயக்கர் கூட்டமைப்பு சார்பில் 35 மாவட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு கூட்டம்.
திண்டுக்கல்லில் அனைத்து நாயுடு நாயக்கர் கூட்டமைப்பு சார்பில் 35 மாவட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ் மாநில நாயுடு பேரவை நிறுவனர் லயன். என்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பின்னர் பேசுகையில் 35 மாவட்ட சமுதாய தலைவர்களை ஒருங்கிணைத்து இந்த சமுதாயத்தை மேம்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. மதுரையில் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை பழதடைந்த நிலையில் உள்ளது. இது மிகவும் வருத்தமாக உள்ளது.அதனை சீர் செய்ய வேண்டுமென தமிழக அரசை கேட்டு கொள்கிறோம். மாமன்னர் திருமலை நாயக்கரின் முழு திருவுருவ சிலை மன்னர் மகாலிலே வருகின்ற 2020 ஆண்டு வைக்கக்கூடிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து நாயுடு நாயக்கர் ஒருங்கிணைந்து அனைவரையும் எம்பிசி பட்டியலிலே சேர்க்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எதிர்காலத்தில் எங்களது இனத்தை மேம்பாடு செய்யும் அரசியல் கட்சிக்கே எங்களது வாக்கு என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் , பாரதீய தெலுங்கர் நல பேரவை , மாமன்னர் திருமலை நாயக்கர் பண்பாட்டு கழகம் , தமிழ்நாடு வெலம நாயுடு இளைஞரணி , ராஜகம்ளத்தார் இளைஞர் பேரவை , தேனி மாவட்ட நாயுடு மகாஜன சங்கம், பழனி கவரா நாயுடு சங்கம், திண்டுக்கல் கம்மா இளைஞர் பேரவை , மாநில தெலுங்கர் சமூக நல பேரவை , வடமதுரை வட்டார நாயுடு நல சங்கம் , நாகை மாவட்ட நாயுடு சங்கம் , கடலூர் மாவட்ட நாயுடு சங்கம் , திருவள்ளூர் மாவட்ட நாயுடு சங்கம் , மதுரை மாவட்ட கவரா சங்கம், கண்டி மன்னர் அசோக் ராஜா மற்றும் 35 மாவட்ட அனைத்து நாயுடு, நாயக்கர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேட்டி: லயன்.என்.கிருஷ்ணமூர்த்தி (தமிழ் மாநில நாயுடு பேரவை நிறுவனர். )
This News Covered From Dindigul District Reporter (Tamil) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or or or or
0 Comments